சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்கு 1 கோடியே, 17 லட்சம் ரூபாய் நஷ்டம்

(UTV|COLOMBO)-பிரானஸ் நோக்கி புறப்படவிருந்த வானூர்தியொன்று உரிய நேரத்திற்கு முன்னர் பயணமானதினால் ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்கு 1 கோடியே, 17 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் வானூர்தி சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிஷாந்த விக்ரமசிங்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 128 பேரின் பயணம் பாதிக்கப்பட்டதுடன், நிறுவனத்தின் மீதான நம்பிக்கைக்கும் சவால்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின்லங்கா வானூர்தி சேவை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினம் இது தொடர்பான விசாரணையொன்று இடம்பெற்றது.

நேற்றைய விசாரணையில் ஸ்ரீலங்கன் வானூர்தி சேவையின் முகாமையாளர்களான தம்மிக்க சேனாநாயக்க மற்றும் ஷய்லான் நிஷாந்த ஹந்தபான்கொட ஆகியோர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெறத்தேவையில்லை

83 ஆயிரம் லீட்டர் கள்ளுடன் ஒருவர் கைது

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை