கேளிக்கை

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் விரைவில் டும் டும் டும்

(UTV|INDIA)-பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். வெளிநாடுகளிலும் ஜோடியாக சுற்றுகிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் மேக்கப் போடாமல் சென்ற இருவரையும் இந்திய பெண் ஒருவர் அடையாளம் கண்டு வீடியோ எடுத்ததை தீபிகா படுகோனே கண்டித்து அந்த பெண்ணை தாக்கியதாகவும் தகவல்கள் வந்தன. தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், திருமண தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 20-ந் தேதி இத்தாலியில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாகவும், இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமான சுமார் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

எளிமையான முறையில் திருமணத்தை நடத்திவிட்டு, இந்தியா திரும்பிய பிறகு நடிகர், நடிகைகளை அழைத்து மும்பையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

ஆபாச பட நடிகை மரணத்தில் மர்மம்

டாப்ஸி தயாரிப்பில் ‘சமந்தா’

இலங்கையின் Mrs Sri Lanka for Mrs World தெரிவுக்கு Uschi Perera [PHOTOS]