விளையாட்டு

போட்டியின் திருப்புமுனை, தந்தை குறித்து தனஞ்சய கருத்து…

(UTV|COLOMBO)-தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு பின்னர் தனஞ்சய டி சில்வா நேற்று(14) கருத்துத் தெரிவிக்கையில்;
“ஆடுகளத்தில் பெரிதாக மாற்றங்கள் இல்லை, நான் நினைக்கிறேன் ஒருநாள் போட்டிகளில் மிகவும் மந்தமாகவே பந்து வீசப்பட்டது, எமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள், அதுவே எமது திருப்பு முனையாக இருந்தது.…

ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு விடையளிக்கையில்;

* முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கு பின்னர் வெற்றி பெற்றதன் இரகசியம்…

“இரகசியம் என்று ஒன்றுமில்லை எமது பயிற்சியில் முன்னேற்றம் அது தான் உண்மை, நாம் எதிர்பார்த்திருந்தோம் அவர்களது பந்து வீச்சினை எதிர்கொள்வதற்கு, கடுமையாக பயிற்சி பெற்றோம்….

* இருபதுக்கு – 20 போட்டியில் துடுப்பெடுத்தாடியது..

“நானும் தினேஷ் சந்திமாலும் ஒரே விதமாக துடுப்பெடுத்தாடுபவர்கள், நான் வீசப்படும் பந்துகளுக்கு என்னால் இயன்றளவு பவுண்டரி அடித்தேன், இறுதியில் ஆட்டமிழந்தேன்..

* விளையாட ஆசையாக இருக்கும் சந்தர்ப்பம்..

“இலங்கை அணிக்கு விளையாடுவதென்றால் எந்த போமட்டில் என்றாலும் விளையாடத் தயார், எச்சந்தர்ப்பத்திலும் எங்கேயும் ஆடத் தயார்…

*திடீரென கிடைத்த வாய்ப்பு எனலாம்..

“ஆம். நான் பொதுவாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகளவு விளையாடியது இல்லை..

*தந்தையின் ஞாபகம்…

“அவருக்கு ரொம்பவே சந்தோசம்.. எனது எல்லா போட்டிகளையும் பார்ப்பார், எங்கிருந்தாவது பார்த்துக் கொண்டிருப்பார்.…

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம்

டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

தன்னம்பிக்கையினை இழந்தாரா மேத்யூஸ்