(UTV|COLOMBO)-வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கையை தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. எனது அமைச்சின் கீழ் செயற்படும் இத்தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபை, இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கும் மற்றும் தொழில் முயற்சிகளை உறுதிப்படுத்தும் பொருட்டு இவற்றை அபிவிருத்தி செய்தல், ஊக்குவித்தல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் முன்னணி அரச நிறுவனமாக காணப்படுகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கொழும்பு, சங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் தொழில் முனைவோர் விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நான்காவது முறையாக நிகழும் இந்த தொடர் விருதுகளில் 2018 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வில், இலங்கையைச் சேர்ந்த ஒன்பது தொழிலதிபர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்துவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, எண்டர்பிரைஸ் ஆசியா நிறுவனத்தின் தலைவர் டாட்டோ வில்லியம் நங், இலங்கைக்கான சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் தினேஷ் வீரக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விருது வழங்கும் வைபவத்தில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், 2007ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கும் தொடரில் 1200 க்கும் மேற்பட்ட மலேசியா, இந்தோனேசியா, புருனே, சிங்கப்பூர், ஹாங்காங், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் சர்வதேச வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆசிய பசிபிக் தொழில் முனைவோர் விருது தொடரின் – பிராந்திய விருது அங்கீகாரத் திட்டமானது தொழில் முனைவோருக்கு சிறப்பான அங்கீகாரத்தை அங்கீகரித்தல் மற்றும் ஆசிய தொழில் முனைவோர், ஆசியா முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தொழில் முனைவுக்கான முயற்சிகளாகும்.
அறிமுகப்படுத்தியுள்ள இப் புதிய கொள்கையானது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோருக்கு பொருத்தமான பல புதுமையான அம்சங்களை மையமாகக் கொண்டது. இது சூழலியல், நவீன தொழில்நுட்பங்கள், தொழில் முனைவோர் கலாச்சாரம், திறன்கள் மேம்பாடு, நிதியியல், அணுகல், சந்தை வசதி, ஆராய்ச்சி, மேம்பாடு, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக்கு திறன்களை செயல்படுத்த உதவுகிறது.
இன்று நம் தொழில் முனைவோர் குறிப்பாக, விருது வென்ற தொழிலதிபர்கள் இக்கொள்கையினை கவனமாக படிப்பதற்கும், அதைப் பயன்படுத்துவதற்கும் தகுந்த நேரம் வந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்றத்திற்கான பொருளாதார தொலைநோக்கு அறிக்கையின் விளைவாக இந்த கொள்கை எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உள்ளூர் தொழில் முனைவோர், இப்போது உலக சந்தைகளில் நுழைய வேண்டும் என்று அவரது தொலைநோக்கு இருந்தது. இதற்காக அரசாங்கம் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், போட்டித்தன்மையை மேம்படுத்தவும் உதவவேண்டும். உண்மையில், எனது அமைச்சு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோருக்கு மட்டுமல்லாமல், புதிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோர்களை உருவாக்க தீவிரமான செயற்பாடுகளை செய்து வருகிறது என்பதை நான் மகிழ்ச்சியாக கூறுகின்றேன்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, எனது அமைச்சின் வர்த்தக திணைக்களத்தின் முயற்சியின் விளைவாக, எங்களது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை வலுப்படுத்த அனுமதிக்கப்பட்ட வர்த்தக அபிவிருத்திக்காகவும், பெரும் ஆதரவு முயற்சிக்காக 8 மில்லியன் யூரோவை நாங்கள் பெற்றோம். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை விரிவுபடுத்துவதற்காகவும், அபிவிருத்தி செய்வதற்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வர்த்தக மையம் ஆகியவற்றின் மதிப்புமிக்க ஆதரவுக்கு, எங்களது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன். என்றார் அமைச்சர் ரிஷாட்.
தொழில்சார் சமத்துவம் உலகின், நிலையான மற்றும் முன்னேறுகிற பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை நோக்கிய விசைப்பொறியாக தொழில் முனைவு விளங்குகின்றது. தொழில்முனைவோர், அரசாங்கங்கள், பல்கலைக்கழகங்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் சமூகங்களுக்கு எண்டர்பிரைஸ் ஆசியா நிறுவனம் ஆண்டுதோறும், அதன் பங்குதாரர்களுக்காக 15 க்கும் மேற்பட்ட பிராந்திய திட்டங்களை ஒழுங்குபடுத்துகிறது என எண்டர்பிரைஸ் ஆசியா நிறுவனத்தின் தலைவர் டாட்டோ வில்லியம் நங் தெரிவித்தார்.
-ஊடகப்பிரிவு-
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]