கேளிக்கை

சுவாதிக்கும் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிக்கும் டும் டும் டும்

(UTV|INDIA)-தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகி பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளும் கிடைத்தன.

தொடர்ந்து போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கு, இந்த ஆண்டு படங்கள் இல்லை. புதுமுக கதாநாயகிகள் அதிகம் வந்ததால் போட்டி ஏற்பட்டு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரப்பட்டனர். இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும், சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.

இவர்களது திருணமத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி-விகாஸ் திருமணம் வருகிற 30-ந்தேதி ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 2 ஆம் திகதி கொச்சியில் நடத்துகின்றனர். விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தாவில் வசிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சுவாதி கணவருடன் ஜாகர்த்தாவில் குடியேறவிருப்பதாக கூறப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தனுஷுடன் இணையும் ரஷ்மிகா

தேவ் படத்திற்கு போட்டியாக களத்தில் இறங்கும் பிரபல நடிகர், நடிகையின் படம்!

மிஸ் இந்தியாவாகும் கீர்த்தி சுரேஷ்