(UTV|COLOMBO)-ரணவிரு ரியல் ஸ்டார் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான 35 பேர்களுக்கு புதிய வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (13) பிற்பகல் ஹொரண மதுராவல பிரபுத்தகம ரணவிரு கிராமத்தில் இடம்பெற்றது.
ஐந்து கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட ரணவிரு ரியல் ஸ்டார் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் இறுதி சுற்றுக்கு தெரிவான 35 பேர்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இந்த வீடுகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
அந்தவகையில் இப்போட்டிகளில் முதலாம் இடத்தைபெற்ற இலங்கை இராணுவத்தின் ஆட்டிலெரி பிரிவு வீரர் சம்பத் ஸ்ரீ பலன்சூரியவுக்கு அக்கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய இரண்டு மாடி வீட்டுக்கான உரிமை பத்திரத்தினை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பிரித் பாராயனத்திற்கு மத்தியில் வீட்டைத் திறந்து வைத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அவ்வீட்டை சுற்றி பார்வையிட்டார்.
வெற்றிபெற்ற ஏனைய 34 இராணுவ வீரர்களுக்கும் ஜனாதிபதி உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்ததுடன், காணியற்ற இராணுவ வீரர்களுக்காக 09 வீடுகள் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீடுகள் அவ் இராணுவ வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]