வகைப்படுத்தப்படாத

கென்யாவில் சுற்றுலா பயணியை கடித்து கொன்ற நீர்யானை

(UTV|KENYA)-கென்யாவின் தலைநகர் நைரோபி அருகே நைவாசா என்ற ஏரியில் நீர்யானைகள் சரணாலயம் உள்ளது. இது மலைக்கு இடையில் அமைந்துள்ளது.

தைவானை சேர்ந்த சுற்றுலா பயணி சங் மிங் சாங் (66) என்பவர் அங்கு சென்று இருந்தார். வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிப் பார்த்தார்.

பின்னர் மலையின் உயரமான இடத்தில் இருந்து நீர் யானைகளை போட்டோ எடுத்தார். அப்போது கால் தவறி நீர்யானைகள் இருந்த குளத்துக்குள் விழுந்து விட்டார். இதனால் ஆவேசம் அடைந்த நீர்யானை அவரை கடித்து குதறியது. வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மீட்டனர். இருந்தும் மார்பில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 6 பேர் நீர்யானைகளால் கடித்து கொல்லப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாகிஸ்தான் கடற்படை தளபதி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

90 சதவிகித விசாரணைகள் நிறைவு

සඳ මත පා තබා වසර පනහයි