கேளிக்கை

ஆண்ட்ரியாவுக்கு நடந்தது என்ன?

(UTV|INDIA)-திரையுலகில் நடிக்க வரும் நடிகைகள் பலருக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக சமீபகாலமாக சில நடிகைகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்து நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது: சினிமாவில் நடிக்க வந்ததிலிருந்து பாலியல் விவகாரம் தொடர்பான பிரச்சினை எதையும் நான் எதிர்கொண்டதில்லை. அதுபோன்ற சம்பவம் நடந்தது உண்மையென்றால் அதை நிச்சயம் உறுதியான மனதுடன் வெளிப்படுத்த வேண்டும். வெளிப்படையாக அதுபோன்ற சம்பவங்களை சொல்வதுதான் சரியானது.

அதற்கு பின்னால் இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நடிகர்கள் அரசியலில் ஈடுபடலாமா என்கின்றனர். தொழில் அதிபர்களும் டீ விற்றவர்களும் அரசியல்வாதியாக வரும்போது நடிகர்கள் ஏன் வரக்கூடாது. இன்னும் சொல்லப்போனால் கிரிமினல் வழக்கு பின்னணி உள்ளவர்கள், பலாத்கார குற்றச்சாட்டு உள்ளவர்களும் அரசியல்வாதியாக இருக்கும்போது நடிகர்கள் வருவதில் தவறில்லை.

அதில் என்ன பிரச்சினை இருக்கிறது? சமீபத்தில் கமலுடன் நடித்திருந்த விஸ்வரூபம் 2 வெளியாகி உள்ளது. இதில் வரும் காட்சிகள் 5 வருடத்துக்கு முன்பு படமாக்கப்பட்டது. அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கிறேன். இந்த கதையோடு வெற்றிமாறன் நீண்டநாள் வாழ்ந்திருக்கிறார். இக்கதை எல்லோர் மனதுக்கும் நெருக்கமானதாக இருக்கும். இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கிண்டல் செய்பவர்கள் மீது நித்யாமேனன் கடும் கோபம்

கொரோனாவிற்கு சவாலாக நித்யானந்தா

வைரலாகும் ‘அயலான்’