கேளிக்கை

விராட் கோலியாக நடிக்கும் துல்கர்

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேடத்தில் மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துல்கர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கர்வான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்த படத்தில் இர்பான்கான், மிதிலா பால்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்த நிலையில், மற்றுமொரு இந்தி படத்திலும் துல்கர் நடிக்க இருக்கிறார்.

தேரே பின்லேடன், த ஷாக்கீன்ஸ், பர்மனு ஆகிய படங்களை இயக்கிய அபிஷேக் சர்மா அடுத்ததாக ஸோயா பேக்டர் என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் துல்கர் சர்மான் விராட் கோலி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக சோனம் கபூர் நடிக்கிறார். இவர் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில் வருகிறாரா? என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்த படம் விராட் கோலியின் முழுமையான வாழ்க்கை கதையாக இருக்காது என்றும் கிரிக்கெட் விளையாட்டில் அவர் நிகழ்த்திய சாதனைகளை மையப்படுத்தி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மூன்றாவது முறையாக இணையும் விஜய் – ராஷ்மிகா

ஹிந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷை நீக்கி பிரபல நடிகை ஒப்பந்தம்

2019 ஆஸ்கர் திரைப்பட விருது விழா– சிறந்த நடிகர், நடிகைக்கான விருது…