சூடான செய்திகள் 1

மல்வத்தை மஞ்சு கைது

(UTV|COLOMBO)-பாதாள உலக குழுவின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் மஞ்சுல சமிந்த எல்வல என்றழைக்கப்படும் மல்வத்தை மஞ்சு காவல்துறை அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய காவல்துறை அதிரடிப்படையினால் பேலியகொட பிரதேசத்தில் வீடொன்றை பரிசோதனை செய்த வேளையே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தே நபரிடமிருந்து 5 கிராம் 840 மில்லி கிராம் ஹெரோயின், 9 மில்லி மீட்டர் ரக 5 இரவைகளும், 5 கடவுச்சீட்டுக்களும், 2 சாரதி அனுமதி பத்திரங்களும், 37 தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பேலியகொட- மல்வத்தை பகுதியை சேர்ந்த 44 வயதான குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் நாளை

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்கும், TNA நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சு!

சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் நீடிப்பு