(UTV|ISRAEL)-இஸ்ரேலிய இராணுவத்தினர் காஸா எல்லையில் நடத்திய வான் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய நிலப்பரப்பின் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய பல ரொக்கெட் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஹமாஸின் ரொக்கெட் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
காஸாவின் ஜபாரவி பகுதியிலுள்ள 23 வயதான எனாஸ் கம்மாஷ் என்ற கர்ப்பிணிப் பெண்ணும் அவரது 18 மாதக் குழந்தையும் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண்ணின் கணவர் காயமடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், ஹமாஸ் வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]