சூடான செய்திகள் 1

விஜயகலாவின் சர்ச்சை கருத்து குறித்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டது

(UTV|COLOMBO)-முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட 300 பக்கங்கள் அடங்கிய விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் குழு ஒன்றினால் இந்த விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு, மொழிப்பெயர்க்கப்பட்டு சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த உரை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு முதலமைச்சர், அரச அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 66 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

குறித்த அறிக்கையை சட்டமா அதிபர் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை, சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கு பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தாய்லாந்தின் புதிய அரசருக்கு அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு

பாராளுமன்றம் ஒத்திவைப்பு…

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை