வகைப்படுத்தப்படாத

கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி

(UTV|INDIA)-திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தாலும் கட்சி விடயங்களிலும்சரி, அரசியல் விடயங்களிலும் சரி, அவர் எந்த முக்கிய முடிவை எடுப்பதாக இருந்தாலும் தலைவர் கருணாநிதியிடம் ஆலோசனை பெற்றே எடுத்து வந்தார்.

அல்லது ஒரு முடிவை எடுத்த பின்னர் அவரிடம் தனது முடிவையும் அதன் விளைவு குறித்தும் ஆலோசிப்பது வழக்கம்.

ஆனால் நேற்று அண்ணா சமாதி அருகே இடம் கொடுக்க மறுத்த தமிழக அரசின் நடவடிக்கையை அவர் முதல்முதலாக கருணாநிதியின் ஆலோசனை இல்லாமல் முடிவு எடுத்தார்.

தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை செய்தாலும் உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து மனுதாக்கல் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தது ஸ்டாலின் தான்.

கருணாநிதி மறைவுக்கு பின்னர் ஸ்டாலின் எடுத்த முதல் முடிவுக்கு நேற்று வெற்றி கிடைத்துள்ளது.

எனவே இனிமேலும் அவர் தொடர்ந்து வெற்றிகரமான முடிவுகளை எடுப்பார் என்ற நம்பிக்கை திமுக

தொண்டர்களுக்கு வந்துவிட்டது என்பது நேற்றை இறுதியாத்திரையில் தொண்டர்கள் பேசிக்கொண்டதில் இருந்து தெரிகிறது.

அதிமுக போல் தலைமையில் உள்ளவர் திடீரென மறைந்துவிட்டால் அந்த பொறுப்புக்கு யார்? என்ற கேள்வியே திமுகவில் எழவில்லை.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Karunaratne won’t give up on Sri Lanka’s World Cup hopes

தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் அவுஸ்திரேலிய நதி