விளையாட்டு

இலங்கை – தென்னாபிரிக்கா நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30ற்கு ஆரம்பமாகவுள்ளது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 3-0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி ஏற்கனவே தொடரை வெற்றி கொண்டுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி கொள்வதன் மூலம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாக நேற்று பல்லேகலயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். அணியின் கௌரவத்திற்காக அடுத்துவரும் இரு போட்டிகளிலும் நன்றாக விளையாட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். அஞ்சலோ மத்தியூஸ் எதிர்கொள்ளும் 200வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்றாகும் .

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பொதுநலவாய ஒன்றியம் மற்றும் ஆசிய விளையாட்டிற்கு தயாராகும் இலங்கை

சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரிகள் சிலருக்கு கொரோனா

தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வேர்னன் பிலந்தர் ஓய்வு