உள்நாடு

88,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

நேற்று (03) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு 88,000 மெற்றிக் தொன் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் 34,000 மெற்றிக் தொன் பச்சை அரிசியும் 48,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் உள்ளடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

சமீபத்தில் அரிசி இறக்குமதிக்கான அனுமதியை ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

Related posts

காட்டு யானையால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களை காவல் காக்கின்றோம் – தியாகராசா தெரிவிப்பு

editor

ரயில் சேவைகள் வழமைக்கு

எக்ஸ்பிரஸ் பேர்ல் பற்றிய விசாரணைகள் இறுதிக்கட்டத்தில்