வகைப்படுத்தப்படாத

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதன் 73-ம் ஆண்டு நினைவுநாள்

(UTV|JAPAN)-இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள் ஓர் அணியிலும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் எதிரணியுமாக மோதிக்கொண்டன. அப்போது, அமெரிக்காவின் பியர்ல் துறைமுகம் மீது எதிர்பாராவிதமாக ஜப்பான் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க பாதுகாப்புப்படையினர் பலர் உயிரிழந்தனர்.

இதனால்  ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஆகஸ்ட்  6-ந் தேதி அமெரிக்க போர் விமானம் அணுகுண்டு வீசி அந்நகரை நிர்மூலமாக்கியது.

அணுகுண்டின் கதிர்வீச்சில் உடனடியாக ஆயிரக்கணக்கானோரும் அந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேரும் உயிரிழந்தனர். மனிதகுலத்துக்கு எதிரான இரக்கமற்ற அணுகுண்டுத் தாக்குதலின் 73ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று ஹிரோசிமா நகரில் நடைபெற்றது.

இதில் ஹிரோஷிமா மேயர் கசுமி மட்சுய், ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, அணுகுண்டுவெடிப்பில் இருந்து தப்பி உயிர்பிழைத்தோர் உள்ளிட்ட ஐம்பதாயிரம்பேர் கலந்து கொண்டு மவுண அஞ்சலி செலுத்தினர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

‘සුපර් 30’ චිත්‍රපටයට ඉන්දිය රුපියල් කෝටි 11ක ආදායමක්

400க்கும் அதிக பாடசாலைகளுக்கு பூட்டு

இன்னும் 3 நாட்களில் காலநிலையில் மாற்றம்..