வகைப்படுத்தப்படாத

கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடம்

(UTV|INDIA)-திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், வயதின் காரணமாக அவரின் உடல் உறுப்புகள் சீராக செயல்பட சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளதென்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல் தரும் ஒத்துழைப்பை வைத்தே அவரது உடல்நிலை குறித்து கூற இயலும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதுவரை அவரது உடல்நிலை குறித்து, காவேரி வைத்தியசாலை ஐந்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைகளில் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் தற்போது வெளியிட்டிருக்கும் 6 ஆவது அறிக்கையில் அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக முதன்முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 10 வது நாளாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் பார்க்க அவரது மனைவி தயாளு அம்மாள் காவேரி வைத்தியசாலைக்கு சென்றார்.

திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி ,பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை சந்தித்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தோற்று காரணமாக சிகிச்சை எடுத்துவரும் கருணாநிதியை தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

கடந்த வாரம் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு உள்ளிட்டவர்கள் கருணாநிதியின் உடல்நலன் குறித்து நலம் விசாரித்தனர்.

திமுக தலைவரின் உடல்நலன் பற்றிய வைத்தியசாலை அறிக்கைகள் அவ்வப்போது வெளியாகி வந்தாலும், அவர் குணமாகி வீடு திரும்பும் வரை வைத்தியசாலையை விட்டுச் செல்லப்போவதில்லை என்ற முடிவில் திமுக தொண்டர்கள் சிலர் ஆழ்வார்பேட்டையில் காத்திருக்கின்றனர்.

இதேவேளை, திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி வைத்தியசாலை வாசலில் விடிய விடிய தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்றிரவு 11 மணி அளவில் ஸ்டாலின் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார். இதனை தொடர்ந்து திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வைத்தியசாலையில் இருந்து புறப்பட்டனர். ஆனால், பெரும் அளவிலான தொண்டர்கள் வைத்தியசாலை பகுதியிலிருந்து வெளியேறாமல், அங்கேயே தங்கி ´தலைவர் வாழ்க´ என்று கோஷம் எழுப்பினர்.

நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து புறப்பட்ட கனிமொழி நள்ளிரவு மீண்டும் வைத்தியசாலைக்கு வந்து இரவு முழுவதும் அங்கேயே தங்கினார்.

(பிபிசி)

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நோட்டனில் ஆணின் சடலம் மீட்பு

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்புகிறார்

குழந்தையை திட்டமிட்டு கொலை செய்த தந்தை