சூடான செய்திகள் 1

ஜனாதிபதியை சந்தித்த சிமோநெட்டா

(UTV|COLOMBO)-இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், காவற்துறை மற்றும் நீதி திணைக்களத்தின் தலைவருமான சிமோநெட்டா சொமருகா, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இதன்போது நாட்டின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு விருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

ஏலவே அவர் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்து இந்த விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

அத்துடன் உள்துறை அமைச்சருடனான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றையும் அவர் ஏற்படுத்திக் கொண்டார்.

அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு ஆசிரியர் சங்கம் கோரிக்கை….

மதுபோதையில் வாகனம் செலுத்திய 433 சாரதிகள் கைது

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!