கேளிக்கை

கண்ணடித்த நடிகை படத்துக்கு சிக்கல்

(UTV|INDIA)-ஆபாச நடிகையாக இருந்து கவர்ச்சி நடிகையாக மாறியிருக்கிறார் சன்னி லியோன். இவரது வாழ்க்கை படம் தற்போது உருவாகி வருகிறது. தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சன்னி லியோன் கேரளா வந்தபோது அவரைக்காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அன்றுமுதல் மலையாள படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறி வந்தார். தற்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது.

இப்படத்தை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குனர் ஒமர் லுலு இயக்குகிறார். ஒரு அடார் லவ் படத்தில் பிரியா பிரகாஷ் கண்ணடித்து லவ் சிக்னல் விடுத்த காட்சி உலக அளவில் ஹிட் ஆனது. ஆனாலும் அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதுகுறித்தும் சன்னி லியோன் படம் இயக்குவதுபற்றியும் ஒமர் லுலுவிடம் கேட்டபோது,’இப்பட தயாரிப்பாளருடன் சில பிரச்னை உள்ளது.

கேரள திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலையிட்டு தீர்த்து வைப்பதற்கான பணிகள் நடக்கிறது. பிரச்னை தீர்ந்ததும் படம் ரிலீஸ் ஆகும். சன்னி லியோன் படத்தை பொறுத்த வரை இப்போதைக்கு என்ன பாணி கதை என்பதை சொல்ல முடியாது. எனது புதிய படத்தில் நடிக்க கேட்டபோது ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் ஜெயராம், ஹனிரோஸ் ஆகியோரும் நடிக்க உள்ளனர்’ என்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சாயிஷாவுடன் யோகிபாபு ஆட்டம்

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்தா?

கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகை – 66வது தேசிய விருது முழு விபரம் (video)