(UTV|COLOMBO)-நீதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் சம்பள உயர்வை போன்று ஏனைய அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் நிதி அமைச்சு இதனை தெரிவிக்கின்றது.
நீதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானம் முன்வைக்கப்பட்டததாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நீதிமன்ற அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் சட்ட வரைவுத் திணைக்களத்தினதும் உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரித்து இருப்பினும், ஏனைய பிரிவுகளின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினலர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும் தற்போது அரசியல் மேடைகளில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.
இருப்பினும் எந்தவொரு என அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]