சூடான செய்திகள் 1

நாட்டின் சில பாகங்களுக்கு பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகள் மற்றும் மன்னாரில் இருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரில் இருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகள் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக கல்முனை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

Related posts

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு அதிகாரிகள் உதவி

“முஸ்லிம்களுக்கு கிடைத்த ரமலான் மாத பேரீச்சம்பழத்தில் முறைகேடா?” முஸ்லிம் கலச்சார அமைச்சு பதில்

ஐ. ம. சுதந்திர கூட்டமைப்பால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை