சூடான செய்திகள் 1

புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் பரீட்சை வினாத்தாள்களை வெளியிடுவதற்கு தடை…

புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் குறித்த பரீட்சை வினாத்தாள்களை இரகசியமாக வைத்திருத்தல், சமூக வலைதளங்களில் பகிருதல் மற்றும் பத்திரிகைகளில் பிரபலப்படுத்துவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்களை விற்பது அல்லது அச்சிடுவதும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, பரீட்சை நடைபெறும் எதிர்வரும் 05ம் திகதியன்று பரீட்சை இடம்பெறும் கால நேரத்தில் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளில் அதிபர்கள் காரியாலயம் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும், பரீட்சை நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்கள்/ அதற்கு சம்பந்தப்பட்டோர் தவிர்ந்த வேறு எவரும் குறித்த காலப்பகுதியில் பரீட்சை நிலையங்களுக்கு உள்வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இவைகளை புறக்கணிக்கும் பட்சத்தில் குறித்த நபர் தொடர்பில் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 இனூடாகவோ தெரிவிக்கலாம் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

IS அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் அறிந்திருந்ததாக பிரதமர் தெரிவிப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலைக்கு தற்காலிக பூட்டு

எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை…