சூடான செய்திகள் 1

வீதி விபத்துக்களால் ஒருநாளைக்கு சராசரி 8 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கடந்த ஆண்டில் வீதி விபத்துக்களால் சராசரியாக ஒரு நாளைக்கு 8 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பொலிஸாரின் தகவல் படி, 2017ம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் ஒரு நாளைக்கு 12 பேர் காயங்களுக்குள்ளாகி உள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாட்டு, வீதிப் பாதுகாப்பு மற்றும் அதிவேக பாதை சுற்றுலாப்பிரிவு பணிப்பாளர் பொலிஸ் அதிகாரி இந்திக ஹப்புகோட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2016ம் ஆண்டில் அபாயகர விபத்துக்கள் 2,798 இடம்பெற்றுள்ளன. 2017ல் அபாயகர விபத்துக்கள் 2,922 ஆக அதிகரித்துள்ளன. அதன்படி 2016இல் 2,961 பேரும் 2017இல் 3,100 பேரும் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 2018 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இடம்பெற்ற அபாயகரமான விபத்துக்களுள் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,514 ஆக உள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

ஹம்பாந்தோட்டை நகர மேயருக்கு பிணை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு (UPDATE)

இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள கூட்டறிக்கை!