சூடான செய்திகள் 1

இலங்கையில் இருதய நோயால் நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழப்பவர்களில் 25 வீதமானவர்கள் இளைஞர்கள் என தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருதய நோய் காரணமாக 24 மணித்தியாலங்களுக்குள் 150 பேர் வரை உயிரிழக்கின்றனர். இதேவேளை, வருடத்திற்கு 48,000 பேர் மரணிக்கின்றனர். இவர்களில் 25 வீதமானவர்கள் இளைஞர்கள். இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு முடியும். புகையிலைப் பாவனை மற்றும் மது பாவனையே இருதய நோய்க்கான பிரதான காரணிகளாக அமைகின்றன. அதேநேரம், கொலஸ்ட்ரோல் அதிகரிப்பும் இருதய நோயாளர்களைப் பாதிக்கின்றது என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நாலக சில்வாவின் உத்தியோகபூர்வ அறைக்குச் சீல்…

உணவு தொண்டையில் சிக்கி 1வயது பிள்ளை மரணம்!

மைத்திரிபால செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!