வகைப்படுத்தப்படாத

110 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது – மீட்பு பணி தீவிரம்

(UTV|INDIA)-பொதுமக்கள் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடாமல் அப்படியே விடுவதால் அதில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து அறிவுறுத்தியும் சிலர் அதனை அஜாக்கிரதையாக விட்டுவிடுகின்றனர்.

 

இந்நிலையில், பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் நேற்று மாலை 3 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது. இதுபற்றி கோட்வாலி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
110 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்னர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க, ஆக்சிஜனும் செலுத்தப்படுகிறது. ஆனால் குழந்தை உயிருடன் இருக்கிறதா இல்லையா? என்பது உறுதி செய்யப்படவில்லை.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

குப்பை பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எச்சரிக்கை

“The public must accept diversity” – Lakshman Kiriella