வகைப்படுத்தப்படாத

நவாஸ் ஷரிப்பிற்கு லண்டனில் சிகிச்சை

(UTV|PAKISTAN)-பனாமா ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்  ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பும், அதை தொடர்ந்து நெஞ்சு வலியும் ஏற்பட்டது.

இதனால் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அறிவியல் மருத்துவ நிறுவன ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, இருதய சிகிச்சை பிரிவில் நவாஸ் ஷரிப்அங்கு சிகிச்சை பெறும் வார்டு கிளை சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை முடியும் வரை நவாஸ் ஷரிப் தங்கியிருக்கும் வார்டு கிளை சிறையாக செயல்படும் என இஸ்லாமாபாத் தலைமை கமி‌ஷனர் நேற்று அறிவித்தார்.

இதற்கிடையே, இங்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதிலும் நவாஸ் ஷரிப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

எனவே, அவரது தனிப்பட்ட குடும்ப டாக்டர் அட்னன் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்தார். பின்னர் அவரை லண்டன் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கலாம் என பரிந்துரை செய்தார்.

எனவே, அவருக்கு லண்டனில் வைத்து சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அனேகமாக வருகிற 2-ந் தேதி அவர் லண்டன் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக ஒழுக்கக்கோவையில் பிரதமர் கைச்சாத்து

AG calls for comprehensive report on Easter Sunday attacks

ரணில் ஜெயவர்தன இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக நியமனம்