வணிகம்

தேசிய அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று நிர்ணயம்

(UDHAYAM, COLOMBO) – தேசிய அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று நிர்ணயிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

சந்தையில் உள்நாட்டு அரிசி அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில தினங்களாக மக்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்ட போதும் உள்நாட்டு அரிசிக்கான விலைகள் நிர்ணயிக்கப்படவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரிசி உற்பத்தியாளர்களுக்கிடையே அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உள்நாட்டு மற்றும் இறக்குமதி அரிசிக்காக தனித்தனி கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என தீர்மானிகப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்றைய தினம் தேசிய அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

Related posts

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் பூட்டு

ஏப்ரல் முதலாம் திகதி முதல் குறைந்த விலையில் அரிசி [VIDEO]