(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் பொது தேர்தலில், இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, உள்ளிட்ட ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்குமான தேர்தல் நேற்று நடைபெற்றது.
மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகின.
ஆட்சியமைக்க 137 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 114 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், 57 தொகுதிகளில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், முன்னிலை வகிக்கின்றது.
இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்து, தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை என்றும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து பல கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நவாஸ் ஷரீப் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]