சூடான செய்திகள் 1

8500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO)  8500 பட்டதாரிகளை ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 பேரை இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து தேசிய பாடசாலைகளுக்காக மேலும் 3500 ஆசிரியர்களை இணைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மடிகணனிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

இன்று நள்ளிரவு முதல் 195 ரூபாவால் அதிகரிக்கும் சமையல் எரிவாயு விலை

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளில்!இரகசிய தகவலை வெளியிட்ட உதய கம்மன்பில

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து