(UTV|COLOMBO)-ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவிருந்த இலங்கை குறித்த பிரேரணையை நீர்த்துப்போக செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லி ஜுனியரின் உறுப்புரிமை தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு மூன்று தடவைகள் இலங்கைக்கு, முன்னாள் அரசாங்கத்தின் 50 ஆயிரம் பவுண்ட் நிதியுடன் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்திருந்தது.
இலங்கையின் முன்னாள் அரசாங்கத்திடம் இருந்து இந்த வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு, ஜெனீவா பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று 2014ம் ஆண்டு அவரால் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரனுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
பிரித்தானிய நாடாளுமன்ற நிலையியல்குழு நடத்திய விசாரணையின் பின்னர், அவரை 30 நாடாளுமன்ற அமர்வு நாட்களுக்கு தடைவிதிக்க கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது.
இதன்படி நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், இந்த தீர்மானத்துக்கு உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் 30 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]