வணிகம்

புதிய தலைமைத்துவ அணியுடன் எதிர்காலத்தை திட்டமிடும் ikman.lk

(UTV|COLOMBO)-இலங்கையின் மாபெரும் ஒன்லைன் இணைய சந்தைப்பகுதியான ikman.lk, தனது புதிய நிபுணத்துவ அணியினரை அண்மையில் நியமித்திருந்தது. இதனூடாக, நிறுவனத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லக்கூடிய எதிர்காலத் திட்டத்துக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளது.

கொள்வனவாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பைப் பெற்ற இணையத்தளம் எனும் வகையில், ikman.lk தனது செம்மையாக்கல் செயன்முறையினூடாக, இலங்கைச் சந்தையில் சில பிரிவுகளில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பாரிய பிரிவுகளை இனங்கண்டிருந்ததுடன், அவற்றை சீராக்குவதனூடாக அர்ப்பணிப்பான அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

ikman.lk. இன் முகாமைத்துவ பணிப்பாளர் அலெக்ஸான்டர் லோபெக் கருத்துத் தெரிவிக்கையில், ´எமது நிறைவேற்று அணி நிபுணத்துவம் மற்றும் அனுபவம் ஆகியவற்றை கொண்டுள்ளதுடன், கடந்த சில ஆண்டுகளில் நாம் பெற்றுக் கொண்ட வாய்ப்புகளை பயன்படுத்தி ஆழமான துறைசார் உள்ளம்சங்களுடன் முன்னோக்கி பயணிக்கிறது. நாம் இலங்கையில் வெற்றிகரமாக ஆறு வருட பூர்த்தியை கொண்டாடுவதுடன், எமது புதிய நியமனங்களினூடாக ikman.lk எமது வாடிக்கையாளர்களுடன் பேணி வரும் உறவை தொடர்ச்சியாக மேம்படுத்தும் என்பதுடன், வாடிக்கையாளர்களின் தேவைகளை இனங்காணக்கூடிய எமது திறனை வலிமைப்படுத்தி, அவர்களுடன் சிறந்த அனுபவங்களுடன் ஈடுபாட்டை பேணக்கூடிய வகையில் அமைந்திருக்கும் என்றார்.

எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் உறுதியான வளர்ச்சியை நோக்கி வியாபாரத்தை கொண்டு செல்லும் வகையில், ikman.lk இனால் நிறுவனத்தினுள்ளிருந்தும், வெளியிலிருந்தும் அனுபவம் வாய்ந்த நிறைவேற்று அதிகாரிகள் பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறு பிரதான பிரிவுகளின் பொறுப்பை வகிப்பார்கள். சந்தைப்பகுதி, வாகனங்கள், சொத்துக்கள், தொழில், பெனர் விற்பனைகள் மற்றும் iCompare போன்றன அவற்றில் அடங்குகின்றன.

சந்தைப்பகுதியின் பணிப்பாளராக ஷபீர் டீன் செயற்படுகிறார். 2018 ஜுன் மாதம் ikman.lk உடன் இணைந்து கொண்ட இவர், கள விற்பனை, சந்தைப்பகுதி மற்றும் Buy now ஆகிய பகுதிகளின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வார். மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறைகளில் அணிகளுக்கு தலைமைத்துவம் வழங்கியிருந்தமை, செயற்திட்ட திட்டமிடல் மற்றும் நிறைவேற்றல் போன்றவற்றில் பணியாற்றிய அனுபவத்தை இவர் கொண்டுள்ளார்.

ikman.lk இன் வாகனங்கள் பிரிவின் பணிப்பாளராக ரிமாஸ் மர்சூக் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறுவனத்துடன் இணைந்து கொண்ட இவர், வாகனங்கள் விளம்பரங்கள் பிரிவில் வியாபார விரிவாக்கல் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இயங்குகிறார். ikman.lk உடன் இணைந்து கொள்ளும் முன்னர், முன்னணி உற்பத்தி நிறுவனமொன்றில் இவர் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரியாக பணியாற்றியிருந்தார். விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் 20 வருட கால அனுபவத்தை ரிமாஸ் கொண்டுள்ளார்.

சொத்துக்கள் பிரிவின் பணிப்பாளராக சந்திம விக்ரமதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ikman.lk இன் புதிய அங்கமான புதிய அபிவிருத்திகள் பகுதியின் பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றுவார். வாடிக்கையாளர்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்படும் தொடர்மனை அலகுகள் மற்றும் வீடமைப்புத் தொகுதிகள் பற்றிய விளக்கங்களை பெற்றுக் கொடுப்பது மற்றும் அவசியமான தொகுதிகளை முன்பதிவு செய்து கொள்வது போன்ற செயற்பாடுகளுக்கு இவர் பொறுப்பாக செயலாற்றுவார்.

சொத்துக்களுக்கான தரகு மாதிரியும் இந்தப் பிரிவில் உள்ளடக்கப்படும். ஆகஸ்ட் மாதத்தில் ikman.lk உடன் சந்திம இணைந்து கொள்ளவுள்ளதுடன், 15 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவுகளில் கொண்டுள்ளார். ந-வணிக தலைமை அதிகாரி மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் செயற்பாடுகள் தலைமை அதிகாரி போன்ற பொறுப்புகளில் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

சிரேஷ்ட முகாமையாளராக இணைந்து கொள்ளும் மெத்சலா அத்தநாயக்க, தொழில்கள் பிரிவை கண்காணிப்பார். ikman.lk தொழில் பகுதியில், நிறுவனங்களுக்கு உதவும் பணி வெற்றிடங்கள் பற்றிய பதிவுகள் பதிவிடப்படுகின்றன. அவர்களுக்கு இலகுவாக பொருத்தமான விண்ணப்பதாரிகளை தெரிவு செய்து கொள்ளக்கூடியதாக இந்த பகுதி அமைந்துள்ளது. பெறுமதி சேர்க்கும் ஒரு பகுதியாக, இந்த தொழில் பகுதியில் விரைவில், ஊழியர்களை பணிக்கு தெரிவு செய்யும் அம்சங்கள் உள்வாங்கப்படும்.

அணிகளை நிர்வகித்தல் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளை பேணுவதில் முன் அனுபவத்தை மெத்சலா கொண்டுள்ளார். துறையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அனுபவத்தை இவர் கொண்டுள்ளார். நிதி மற்றும் முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் இவர் கொண்டுள்ள அனுபவம், இந்தப் பிரிவில் இவரின் சிறந்த செயற்பாட்டுக்கு பக்கபலமாக அமைந்திருக்கும். ikman.lk இன் ஆரம்ப கால ஊழியர்களில் ஒருவரான ஸ்டெஃபான் பீக்மெயர், பெனர் விற்பனை பணிப்பாளராக செயலாற்றுவார். இதனூடாக ஸ்டெஃபான் ikman.lk இன் பெனர் விற்பனை பகுதியையும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளையும் மேற்பார்வை செய்வார். பெனர் விற்பனை பிரிவினூடாக வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியும், மேலதிக அனுகூலங்களும் சேர்க்கப்படுகின்றன.

ஊடகம், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை ஆகிய பிரிவுகளில் ஸ்டெஃபான் 25 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை கொண்டுள்ளார். iCompare பகுதியின் சிரேஷ்ட முகாமையாளராக ஜனக நமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் காப்புறுதி, லீசிங் மற்றும் தனிநபர் கடன்கள் மற்றும் அடமானம் தொடர்பில் வாடிக்கையாளர்களுககு; ஒப்பீடுகளை மேற்கொண்டு சிறந்த பொருத்தமான தெரிவை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் இந்த பகுதி அமைந்துள்ளது. 2017 இல் ikman.lk உடன் இணைந்து கொண்ட ஜனக, 16 வருட காலம் முன்னணி BPO மற்றும் தொலைத்தொடர்பாடல் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பசும்பால் தேவையை பூர்த்தி செய்ய திட்டம்

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டடம்