சூடான செய்திகள் 1

கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் குற்றச் செயல்கள் குறைவு

(UTV|COLOMBO)-கடந்த ஆறு மாத காலத்துக்குள் 252 மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தவறான ஆண், பெண் உறவு, பாதாள உலக செயற்பாடுகள், பழைய சம்பவங்களுக்கு பழிவாங்கள் போன்ற நடவடிக்கைகள் இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முழுவதும் 452 மனித படுகொலைகள் இடம்டபெற்றுள்ளன. இதனுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் இக்குற்றச் செயல்களில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு  3368 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்வருடத்தின் கடந்த ஆறு மாத காலத்துக்குள் 1503 சம்பவங்களே பதிவாகியுள்ளன.

கடந்த வருட குற்றச் செயல்களில் பாலியல் துஷ்பிரயோகம் செயல்கள் 1732 பதிவாகியிருந்தன. இவ்வருடத்தின் கடந்த ஆறு மாத காலத்துக்குள் 857 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களே பதிவாகியுள்ளதாகவும், ஒப்பீட்டு ரீதியில் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் குற்றச் செயல்களில் குறைவைக் காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

UPDATE-உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர்

நௌவர் அப்துல்லா கைது; யார் இந்த அப்துல்லா

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் தொடர் மழை