வளைகுடா

சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாக தூங்காத நபர்

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார். தொடக்கத்தில் அவர் சவுதி அரேபியா ராணுவத்தில் பணிபுரிந்தார்.

அப்போது தொடர்ந்து 20 நாட்கள் தூங்காமல் கண்விழித்து இருந்தார். பணி முடிந்ததும் ஆஸ்பத்திரிக்கு சென்று அதற்கான சிகிச்சை பெற்றார். இருந்தும் அவருக்கு தூக்கம் வரவில்லை. எனவே 4 நாடுகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதித்தது.

இருந்தும் அவரால் 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்க முடியவில்லை. தூங்குவதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் அவருக்கு தூக்கம் வரவில்லை.

இதனால் ஆச்சரியம் அடைந்த டாக்டர்கள் குழு அதற்கான காரணத்தை ஆய்வு செய்தனர். சரியான காரணம் தெரியாவிட்டாலும் அவரின் மனஅழுத்தமே இதற்கு காரணமாக இருக் கலாம் என தெரிவித்துள் ளனர்.

இதற்கிடையே அல் பகா பகுதி நிர்வாகி இவரது நிலை குறித்து அறிந்து அவரிடம் விசாரித்தார். மேலும் அவருக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்தார். மேலும் அவரது எஞ்சிய காலம் முழுவதும் அவரது அனைத்து தேவைகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளில் இருந்து விலக கத்தார் முடிவு

சவூதி அரேபிய மக்களுக்கு திரைப்படம் பார்க்க சந்தர்ப்பம்

சவுதி அரேபிய தூதரகத்தில் துருக்கி பொலிஸார் தீவிர சோதனை