சூடான செய்திகள் 1

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை

(UTV|COLOMBO)-அனுராதபுரம், மிஹிந்தலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புனித நகர எல்லைக்ளுக்குள் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அரச ஊழியர்கள் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற அமைச்சின் நடமாடும் சேவையில் அமைச்சர் உரையாற்றினார்.
அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை நடத்தும் பொதுமக்களின் பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையில் நோக்கி, அவர்களுக்கு மாத்திரம் வர்த்தக நிலையங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதிதாக வர்த்தக முயற்சிகளைத் தொடங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது

ரணில்- சம்பந்தன் ஒப்பந்தம் ​பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு

துறைமுக பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது