சூடான செய்திகள் 1

அலோசியஸின் சிறை கூண்டில் சிக்கிய சிம் அட்டைகள் பல குற்றங்களுடன் தொடர்பு

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் அர்ஜுன் அலோ சியஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் எச்.அறையிலிருந்து மீட்கப்பட்ட மூன்று கையடக்க தொலைபேசிகள், ஐந்து சிம் அட்டைகள் தொடர்பில் இடம்பெறும் விசேட விசாரணைகளில் பல உள்ளக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை சட்டமா அதிபர் சார்பில் நேற்று மன்றில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர கோடடை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தார்.

தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுடன் இந்த தொலைபேசிகள் தொடர்பு பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் உரிய விசாரணைகளின் பின்னர் உரிய நீதிமன்றங்களுக்கு அறிக்கை தாக்கல் தாக்கல் செய்யப்படும் என்றும் சிரேஷ்;ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர இதன்போது நீதிமன்றுக்கு உத்தியோகப்பூர்வபற்றற்ற முறையில் சுட்டிக்காட்டினார்.

எனினும் குறித்த எச். அறையில் பல கைதிகள் உள்ளநிலையில் திட்டமிட்ட குற்றங்களுடன் அலோசியஸ், பலிசேன தொடர்புப்பட்டுள்ளதாக கருத்தில்லை எனவும் அவர் கூறினார். இந்நிலையில் தொலைபேசிகள், சிம் அட்டைகள் தொடர்பில் டயலொக் ,எடிசலாட் எயார்டல்,ஹச் ஆகிய தொலைபேசி சேவை வழங்குநர்களிடமிருந்து அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மொபிடல் நிறுவனத்திடமிருந்து மட்டும் இன்னும் அறிக்கை கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய ஹரிப்பிரியா ஜயசுந்தர இந்த அறிக்கை கிடைத்தும் பகுப்பாய்வு செய்து குற்றம் ஒன்று வெளிப்படுத்தப்படுமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம்

CIDக்கு அச்சுறுத்திய கோட்டா: வழக்கு தாக்கல் செய்யும் ரிஷாட்

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு