சூடான செய்திகள் 1

மாணவிகள் இருவர் மீது 48 வயது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகள் இருவர் மீது அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ் நகரை அண்மித்து இருக்கின்ற இப் பாடசாலையின் ஏழாம் ஆண்டு மாணவிகள் இருவர் மீது பாடசலையின் ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ் மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
ஆசிரியர் மீதான இந்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அப் பாடசாலையில் கல்வி கற்பித்து வந்த 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற பொலிஸார் இன்றைய தினம் நீதி மன்றத்திலும் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

அரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை…

நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வு

பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் நாடு திரும்பினர்