சூடான செய்திகள் 1

அரசாங்க பங்குடமை மாநாட்டில் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் 5 ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜோர்ஜியா சென்றுள்ளார்.

நேற்று (17) அதிகாலை ஜோர்ஜியாவின் ஷோட்டா ரஸ்ட்டாவெளி திபிலிசி (Shota Rustaveli Tbilisi) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை, விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் சர்வாசிட்சே (George Sharvashidze) உள்ளிட்ட பிரதிநிதிகள் வரவேற்றனர்.

திறந்த அரசாங்க பங்குடமை 2011 ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் முறையாக தாபிக்கப்பட்டதுடன், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லாட்சி நிகழ்ச்சித்திட்டத்தை பாராட்டி அப்பங்குடமையில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் 2015 ஆம் ஆண்டு இலங்கையும் அதில் இணைந்துகொண்டது.

திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் மாநாடு இன்று (18) திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

இலங்கை இவ்வமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள முதலாவது தெற்காசிய நாடாகும். தற்போது உலகில் 75 நாடுகள் திறந்த அரசாங்க பங்குடமையில் உறுப்புரிமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

வன விலங்குகளால் உணவு பொருட்களுக்கு ஏற்படும் அழிவினை தடுப்பதற்கு ஒத்துழைப்பு

சர்வதேச யோகா தினம் இன்று

பொது செயலாளர் அலுவலக புகையிரத தரிப்பிடம் இன்று முதல் திறப்பு