வணிகம்

INSEE சீமெந்துக்கு இரண்டு சிறந்த முகாமையாளருக்கான விருதுகள்

(UTV|COLOMBO)-INSEE சீமெந்தை பொறுத்தமட்டில் மனித வளங்கள் அபிவிருத்தி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பிரதான பெறுமதியாக அமைந்துள்ளது. இதன் வெளிப்பாடாக, கொழும்பு தலைமைத்துவ கல்வியகத்தினால் (Colombo Leadership Academy) அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறந்த முகாமையாளர் விருதுகள் 2017 நிகழ்வில், INSEE சீமெந்து நிறுவனத்தில் சிறப்பாக செயலாற்றும் இரு ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

ஊழியர்களின் திறனை மேம்படுத்தல் பிரிவில் INSEE Ecocycle பொது முகாமையாளர் சஞ்ஜீவ சூலகுமார மற்றும் நிறுவனத்தின் தன்னேற்புத்திட்டத்தை ஒருநிலைப்படுத்தல் பிரிவில் நிதியியல் மற்றும் அறிக்கையிடல் முகாமையாளர் ஹேமமாலி சேனாரட்ன வெற்றியீட்டியிருந்தனர். இந்த இரு வெற்றியாளர்களும் மனித வளங்கள் பிரிவினால் பிரேரிக்கப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்படும் வரை தாம் இந்த விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளோம் என்பது பற்றி அறிந்திருக்கவில்லை. இந்நிலையில் இந்த விருதுகள் இருவருக்கும் எதிர்பாராத வியப்பாக அமைந்திருந்தது.

தமது அணியின் வினைத்திறனை மேம்படுத்தலுக்காக பங்களிப்பை வழங்கியிருந்தமைக்கு சஞ்ஜீவ விருதை வென்றிருந்ததுடன், பல்தேசிய நிறுவனமொன்றில் பணியாற்றும் தமது கனவு மற்றும் INSEE சீமெந்துடன் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக இணைந்து கொண்ட அனுபவம் ஆகியன தொடர்பில் நினைவுபடுத்தியிருந்தார். 10 வருட காலப்பகுதியினுள் கூட்டாண்மைத்துறையில் படிப்படியாக பதவி உயர்வுகளை பெற்றுக் கொண்டதுடன், நிறுவன பணிப்பாளர் குழுவில் நியமனம் பெற்றார்.

ஏனையவர்களை தெரிவு செய்தல் மற்றும் தயார்ப்படுத்தல் போன்றன அவரின் திறனாக அமைந்திருந்தது. ´நிறுவனம் என்னில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டிருந்தது. இது எனது இரண்டாவது பல்கலைக்கழகம். எனக்கு அவர்கள் சுதந்திரம் வழங்கியிருந்ததுடன், என் மீது நம்பிக்கையும் கொண்டனர். இதனூடாக என்னால் எனது முழுத்திறனையும் எய்த முடிந்தது´ என்றார்.

சஞ்ஜீவ பூரண அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார். திருமணமாகி 7 வயது நிரம்பிய மகனை கொண்டுள்ள இவர், தமது வாழ்க்கைத்துணை தம்முடன் பல்கலைக்கழகத்தில் கல்வி தொடர்ந்திருந்ததை நினைவுகூர்ந்திருந்ததுடன், குடும்பம் மற்றும் தமது பிள்ளையின் நாளாந்த செயற்பாடுகளிலும் அவரால் காலத்தை செலவிடக்கூடியதாக அமைந்துள்ளமையை குறிப்பிட்டிருந்தார்.

´அவர் பொறுமைசாலி, நான் நீண்ட நேரம் பணியாற்றும் போது அவரும் அதை புரிந்து கொண்டு செயலாற்றுபவர்´ என்றார்.

மறுபுறம், சிறந்த முகாமையாளருக்கான மற்றுமொரு விருதை வென்ற ஹேமமாலி, முற்றிலும் சுயாதீனமான பெண்ணாக திகழ்கிறார். நிறுவனத்துடன் முகாமைத்துவ பயிலுநராக இணைந்து கொண்ட இவர், 10 வருட காலப்பகுதியினுள் பல்வேறு நிதியியல் சார் சவால்கள் நிறைந்த திட்டங்களை கையாண்டு, சிரேஷ்ட முகாமையாளர் நிலைக்கு உயர்ந்திருந்தார்.

´சவால்கள் இல்லையென்றால் என்னால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. INSEE சீமெந்தில் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உதாரணமாக, ஐரோப்பாவில் நான் முகங்கொடுத்திருந்த பயிற்சிப்பட்டறைகள் எனக்கு விசேடத்துவம் வாய்ந்த பயிற்சிகளை பெற்றுக் கொள்ள உதவியாக அமைந்திருந்தன. இதனூடாக எனது தன்னம்பிக்கை மேம்பட்டிருந்ததுடன், பல்வேறு அணி முகாமைத்துவ நிலையில் எனது தொழில் வாழ்க்கையை கட்டியெழுப்ப எனக்கு வலுவூட்டியிருந்தது.

இலங்கையின் முதல் தர சீமெந்து வர்த்தக நாமமான INSEE உடன் இணைந்துள்ளதையிட்டு நான் மிகவும் பெருமையடைகிறேன்.´ என்றார். சிங்கப்பூரில் பிராந்திய உள்ளக மீளாய்வு அணியுடன் ஒரு வருட காலம் இவர் பணியாற்றியிருந்தார். இதனூடாக இவர் பெறுமதி வாய்ந்த சர்வதேச அனுபவத்தையும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த வியாபார செயன்முறைகள் பற்றியும் அறிந்துள்ளார்.

INSEE சீமெந்து ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் மனித வளங்கள் பணிப்பாளரான பிரசாத் பியதிகம கருத்துத் தெரிவிக்கையில், ´எமது ஊழியர்களை தயார்ப்படுத்துவதில் நாம் அதிகளவு அக்கறை செலுத்துகிறோம். சஞ்ஜீவ மற்றும் ஹேமமாலி இதற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளனர்.´ என்றார்.

1969ம் ஆண்டு தாய்லாந்தில் நிறுவப்பட்ட, தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளரான Siam City சீமெந்து பொது கம்பனி லிமிட்டெட்டின் (SCCC) அங்கத்துவ நிறுவனமாக INSEE சீமெந்து அல்லது Siam City சீமெந்து லங்கா லிமிட்டெட் திகழ்கிறது. INSEE சீமெந்தினால், INSEE வர்த்தக நாமத்திலமைந்த சங்ஸ்தா, மஹாவெலி மறைன், மஹாவெலி மறைன் ப்ளஸ், INSEE றெபிட் ஃபுளோ, INSEE றெபிட் ஃபுளோ ப்ளஸ் மற்றும் INSEE எக்ஸ்ட்ரா சீமெந்து போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும், விரைவில் INSEE சீமெந்து தனது INSEE Concrete (Ready Mixed) உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. மேலும் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் பலகைக்கு பதிலாக கொங்கிறீற் தளத்தில் அமைக்கப்பட்ட பலகையின் மாற்று தயாரிப்பை இறக்குமதி செய்து வருகிறது. Green Building Council இனால் இலங்கையில் காணப்படும் முதலாவது ‘Green Cement’ தயாரிப்புக்கான Green Labeling சான்றளிக்கப்பட்ட சீமெந்து வகையாக INSEE சங்ஸ்தா திகழ்கிறது. இலங்கையில் காணப்படும் ஒரே ஒன்றிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளராக நிறுவனம் திகழ்கிறது.

தாய் நிறுவனமான Siam City சீமெந்து தனியார் நிறுவனம் (SCCC) தேசத்தின் நிர்மாணத்தேவைகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளது. தாய்லாந்தின், சராபுரி பிரதேசத்தில் அமைந்துள்ள சீமெந்து உற்பத்தி நிலையம், உலகின் மாபெரும் சீமெந்து உற்பத்தித்தொகுதியாக அமைந்துள்ளது. பல தசாப்த காலப்பகுதிக்கு மேலாக செயற்பாட்டில் உள்ள Siam City சீமெந்து தனியார் நிறுவனம் (SCCC), பரந்தளவு அனுபவம் மற்றும் அறிவு ஆகியவற்றைக் கொண்டு, துரிதமாக வளர்ந்து வரும் இலங்கை போன்ற பிராந்திய சந்தைகளில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. இது நிலைபேறான நிர்மாணத்தில் நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. தனது பிராந்திய சந்தை பிரசன்னத்தை இலங்கைக்கு மேலதிகமாக கம்போடியா, பங்களாதேஷ், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கொண்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி

அடுத்த வாரம் நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை ஆரம்பம்…

இலங்கையில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் NOLIMIT தெரிவு