சூடான செய்திகள் 1

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த தந்தை உட்பட நால்வர் கைது !

(UTV|COLOMBO)-சிறு குழந்தை ஒன்றுக்கு மதுபானம் அருந்தக்கொடுத்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தை ஒன்றுக்கு மதுபானம் அருந்தக்கொடுக்கும் காணொளியொன்று, சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் தொடர்பான விசாரணைகளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

குழந்தையின் தந்தையே, இவ்வாறு மதுபானம் வழங்குவதாக, காணொளி மூலம் ஊகிக்கக் கூடியதாக இருப்பதுடன், இதனை, பிரிதொரு நபர் காணொளியாகப் பதிவுசெய்து, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தேசிய அரசாங்கம் குறித்த விவாதம் நாளை(07)

தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள கொள்கலன் பரிசோதனைகள் 3 நாட்களுக்குள் நிறைவு

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன விளக்கமறியலில்