வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா – ரஷ்யா பேச்சுவார்த்தை வெற்றி

(UTV|AMERICA)-அமெரிக்கா – ரஷ்யா இடையே நடந்த உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும், பயனுள்ள வகையில் இருந்ததாகவும் டிரம்ப் மற்றும் புதின் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்

இந்தக் கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டமையை நம்புவதற்கு எந்தவொரு காரணமும் தனக்குத் தென்படவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், புட்டினுடனான சந்திப்பு நல்லதொரு ஆரம்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

“பனிப்போர் நிலவிய காலத்துக்கு பின் நடந்துள்ள இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதாக இருவரும் கருதுகிறோம். இரண்டு மிகப்பெரிய அணு ஆயுத நாடுகளான அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் சர்வதேச பாதுகாப்பை கவனிப்பது பொறுப்பாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு எந்த விதத்திலும் இல்லை” என புதின் கூறியுள்ளார்.

இது கடினமான பல தேசிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான நேரம் குறித்த சந்திப்பிற்கு முன்னர் புட்டின் கூறியிருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

பலாங்கொடை நகரை அச்சுறுத்திய நாய் சுட்டுக் கொலை

13 ஆயிரம் அகதிகளை பாலைவனத்திற்கு துரத்திய அல்ஜீரியா

இன்று முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருட்கள்