(UTV|BINLAND)-உலக அளவில் பெறும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ரஷ்யா – அமெரிக்கா ஜனாதிபதிகள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று பின்லாந்தில் நடைபெறுகிறது.
இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷ்யா வின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சின்கி நகரில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ட்ரம்பும், புதினும் முதலில் தனிப்பட்ட முறையிலும் பின்னர் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் பின்லாந்தில் சந்திக்க இருப்பதால் தலைநகர் ஹெல்சின்கி நகர் இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]