சூடான செய்திகள் 1

பரீட்சை நிலையங்களுக்கு மேலதிக பொறுப்பதிகாரி

(UTV|COLOMBO)-பரீட்சை முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் மேலதிக நிலைய பொறுப்பதிகாரியொருவரை நியமிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த மேலதிக நிலைய பொறுப்பதிகாரியூடாக பரீட்சை கண்கானிப்புக்கள் மேற்பார்வை செய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சை மத்திய நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் தொலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொது தராதர உயர்தரப்பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளது.

மேலும், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலம் மூன்று லட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் இன்று

கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

அப்துல்லாஹ் – ரணில் சந்திப்பு