(UTV|COLOMBO)-இலங்கை வந்துள்ள தாய்லாந்தின் பிரதமர் ஜெனரல் ப்ராயுட் ச்சான் ஒ ச்சா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான நல்லுறவை ஆழப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையிலான வர்த்தக தொடர்புகள் மேலோங்கியுள்ளமை தொடர்பில், தாய்லாந்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கையில் இருந்து அதிகபடியான தேயிலையை தமது நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கான வழிகள் குறித்து ஆராய்வதாகவும், அவர் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]