சூடான செய்திகள் 1

நிலைபேறான அபிவிருத்தயை உருவாக்குவதே எமது இலக்கு

(UTV|COLOMBO)-சமகால அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை 2030ஆம் ஆண்டளவில் வெற்றி கொள்வதே இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மூன்றாவது வருடாந்த மாநாடு நேற்று காலை ஆரம்பமானது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இந்த இலக்கை பூர்த்திச் செய்வதற்கு அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் விசேடத் திட்டமொன்றை தேசிய கொள்கையாக இனங்காணப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பிரதமர் தலைமையில் இந்த மாநாடு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கினார்.

சிறிய மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் விசேட கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயல் திட்டத்தை கண்காணிப்பதற்கு பாராளுமன்றத்தில் விசேட கண்காணிப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த இலக்குகளை அடைய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கோதுமை மா விலை அதிகரிப்பு – இன்று முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை

வெப்பத்துடனான வானிலை…

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று