விளையாட்டு

மகளிர் உலகக் கிண்ண தகுதிகான் போட்டிகள் தற்போது கொழும்பில்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு என். சி. சி. மைதானத்தில் தற்போது இடம்பெறுகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் மகளிர் அணி, 7 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது.

இதேவேளை, இந்திய மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு பி. எஸ். எஸ் மைதானத்தில் இடம்பெறுகின்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய மகளிர் அணி, சற்று முன்னர் வரை 08 விக்கட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.

இதனிடையே, பங்களாதேஷ் மற்றம் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு சி. சி. சி. மைதானத்தில் இடம்பெறுகின்றது.

Related posts

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் நாளை ஆரம்பம்

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு

editor

பாகிஸ்தான் சுப்பர் லீக் : பார்வையாளர்களுக்கு அனுமதி?