(UTV|AMERICA)-பிரபல நடிகையும் மொடலுமான கிம் கர்தாஷியான் (Kim Kardashian) அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு சிறைக்குச் சென்றது அவரது ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வார இதழ் ஒன்று தெரிவிக்கையில்;
சமீபத்தில், ரியாலிட்டி டிவி நடிகை கிம் கர்தாஷியான் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு சிறைக்குச் சென்றார். அங்கு, அவர் 1,800 கைதிகளின் இருப்பிடங்களை பார்வையிட்டார். மேலும், 15 பெண் கைதிகளைச் சந்தித்து பேசியுள்ளார்.
அவர்களிடம் சிறை அனுபவத்தைப் பற்றி கேட்டறிந்ததுடன், விடுதலைக்குப் பின் சமுதாயத்திற்கு திரும்புவது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து, சமுதாயத்தில் பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என கிம் கூறியதாக, அந்த வார இதழ் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கிம் கர்தாஷியான், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து, சிறைச்சாலை சீர்திருத்தத்தைப் பற்றி விவாதித்தார். இதையடுத்து, ஆயுள் தண்டணை அனுபவித்து வந்த கிம் கர்தாஷின் பாட்டி, அலிஸ் மரி ஜான்சன் விடுவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]