சூடான செய்திகள் 1

மஹிந்தானந்தவின் வழக்கு விசாரணை மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோனிடம்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து, நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்கி வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க கடந்த வழக்கின் போது மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற பிரதான நீதிபதி ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அது மேலதிக விசாரணைக்காக நீதிபதி விக்கும் களுஆராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும் இந்த வழக்கினை விசாரணை செய்ய நீதிபதி விக்கும் களுஆராச்சி அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

இதனால் வழக்கினை விசாரிக்க நீதிபதி சம்பத் அபேகோன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனடிப்படையில் வழக்கு விசாரணை நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வாகனம் விபத்து;மூவர் காயம்

ஏழாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில்