விளையாட்டு

800 ஐத் தொடர்ந்து முரளிக்கு தலைமையிலும் சிக்கல்

(UTV | கொழும்பு) – இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 800 என்கிற பெயரில் படமாக எடுக்கிறார்கள். அந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பார் என்று அறிவித்து மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள்.

போஸ்டரை பார்த்தவர்கள் தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிக்கக் கூடாது, உடனே 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் தெரிவித்தார்கள்.

தமிழர்களின் துரோகி விஜய் சேதுபதி என்கிற ஹேஷ்டேக் நேற்று ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டானது. இந்நிலையில் தன் படத்தில் இருந்து விலகி விடுமாறு முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகியுள்ளார்.

இதை பார்த்தவர்கள், முத்தையா முரளிதரன் சொல்லித் தான் அந்த படத்தில் இருந்து விலக வேண்டுமா, ஒரு துரோகியின் பேச்சை கேட்பீர்கள், தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்க மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்னும் சிலரோ, விஜய் சேதுபதி பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்ததாக சன் ரைசர்ஸுக்கு இருக்கிறது வேடிக்கை. தமிழருக்கு சொந்தமான சன் ரைசரஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஒரு தமிழினத் துரோகி இருக்கலாமா?. உடனடியாக முத்தையா முரளிதரனை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசிய மெய்வல்லுனர் போட்டி; பாசில் உடையாருக்கு பதக்கம்

46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்

இலங்கை கிரிக்கெட் அணியிலும் கொரோனா