விளையாட்டு

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

(UTV|INDIA) இந்தியன் ப்ரியமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் 21வது போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்க் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
ஜெய்பூரில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து, 140 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 13.5 ஓவர்கள் நிறைவில், 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Related posts

இங்கிலாந்து 03 விக்கட்டுகளை இழந்து 188 ஓட்டங்கள்

மாலிங்க தலைமையிலான இருபதுக்கு 20 குழாம் அறிவிப்பு

புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது