சூடான செய்திகள் 1

8 இந்திய மீனவர்கள் கைது…

(UTV|COLOMBO)-வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைது செய்யப்பட்டவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் காங்கேசந்துறை கடற்தொழில் அலுவலகத்தின் ஊடாக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம்

15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை